About Us

Image

பதிப்பகத்தைப் பற்றி

ஆவியுலக ஆராய்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னோடிகளில் ஒருவரும் 40 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உடையவரும் இந்தத் துறையில் பல புத்தகங்களை எழுதியவரும், ஆவிகள் உலகம்  மற்றும் மனோசக்தி என்னும் மாத இதழ்களின் ஆசிரியருமான விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன் அவர்களால் இந்தப் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமானுஷ்யம் என்றாலே அருவெறுப்பான விஷயமாகப் பலரால் கருதப்படுகிறது. ஆவிகள் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் குலை நடுங்குகிறது. நேற்று வரை நம்முடன் வாழ்ந்து இறந்தவர்களையே பேய் பிசாசுகள் என்று வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்த எண்ணம் தவறு. ஆவிகள் என்பது ஆபத்தான விஷயமல்ல என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்.

இறப்புக்குப் பிறகும் மனிதர்கள் வேறு நிலைகளில் நமது கண்களுக்குத் தென்படாத உருவத்தில் தொடர்ந்து வாழ்கிறார்கள். நாம் நினைத்தால் அவர்களுடன் பேச முடியும் என்பதைத் தமிழர்கள் மத்தியில் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்.

அந்த அடிப்படையில் ஆவியுலகம் சார்ந்த நூல்களை நிறைய வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் மேகதூதன் பதிப்பகத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

அதே சமயம் வேறு துறை நூல்களும் இங்கு வெளியிடப்படுகின்றன.

இத்துடன் ஆவியுலக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளார்.

 

ஆன்லைன் தவிர கீழ்ண்ட வழிகளிலும் எங்களது புத்தகங்களைப் பெறலாம்.

புத்தகங்களைப் பெறும் முறைகள்

எங்களது பட்டியலில உங்களுக்கு என்னென்ன புத்தகங்கள் தேவையோ, அந்தப் புத்தகங்களின் பெயர்களை ஒரு கடித த்தில் எழுதுங்கள். பிறகு உங்களின் தெளிவான முழு விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் எழுதுங்கள். விலாசத்தைக் கூட்டு எழுத்துக்களில் எழுதாமல், தனித்தனி எழுத்துக்களில் எழுதுங்கள். அதை எங்களுக்கு அனுப்புங்கள். கடிதம் கிடைத்தவுடன் அப்புத்தங்களை, உங்கள் முகவரிக்குப் பாதுகாப்பாக வி.பி.பி.-யில் அனுப்பி வைக்கிறோம். வி.பி.பி. பாக்கெட்டைத் தபால்கார ர் உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து உங்கள் கையில் கொடுப்பார். உரிய தொகையை தபால்கார ரிடம் கொடுத்து விட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.

புத்தக ஆர்டர்களை இப்படியும் கொடுக்கலாம்.

(044) 42155831 என்ற எண்ணில் பேசி புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுக்கலாம். 98406 41352 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியும் ஆர்டர் கொடுக்கலாம். நேரில் வந்தும் புத்தகங்கள் வாங்கலாம்.இதனால் மற்ற புத்தகங்களைப் பார்த்து வாங்கும் வாய்ப்பு உங்களுக்கு அமையும் (அலுவலக நேரம் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 வரை)

மேகதூத ன் பதிப்பகம்

265/2, பாரதி சாலை(பைக்ராப்ட்ஸ் ரோடு)

(மெக்ரென்னட் பேக்கரி கட்டிட மாடியில்)

திருவல்லிக்கேணி,

சென்னை-600005

மின்னஞ்சல்; megathudan.books@gmail.com